என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
    X

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

    • தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
    • தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பை அனைத்துக் கட்சி கூட்டம் ஒருமனதாக எதிர்க்கிறது என்றார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

    மக்கள் தொகை கட்டுப்பாட்டை விழிப்பாக செயல்படுத்தியதற்காக நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைப்பதை ஏற்க முடியாது.

    2026 மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    1971 மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்கப்பட்ட தொகுதிகள் மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

    தொகுதி மறுசீரமைப்பை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிக்க வேண்டும்.

    தென்மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கை குழு அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×