கோவை பாலியல் வன்கொடுமை- பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்த அ.தி.மு.க.வினர்

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை பாலியல் வன்கொடுமை- பெண்களுக்கு பெப்பர்  ஸ்பிரே அளித்த அ.தி.மு.க.வினர்
Published on

கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

பாதிப்புக்குள்ளான அம்மாணவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை தேடிவந்தநிலையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தனிப்படை போலீசார் சுட்டுப் பிடித்தனர். குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீசார் சுட்டுப்பிடித்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் மதுக்கரை பகுதியில் அ.தி.மு.க.வினர் பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே வழங்கினர். பேருந்தில் பயணித்த பெண்களுக்கு பெப்பர் ஸ்பிரே அளித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி அ.தி.மு.க.வினர் பெப்பர் ஸ்பிரே வழங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com