என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ - தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
- முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கள ஆய்வுப்பணி மேற்கொள்கிறார்.
இதற்காக இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ சென்றார். வழிநெடுக பொதுமக்கள் கூடிநின்று அவரை வரவேற்றனர்.
இதனையடுத்து முதலமைச்சர் கார் மூலம் திருப்பூர் மாவட்டம் உடுமலை செல்கிறார்.
2026 சட்டமன்ற தேர்தல் வியூகம் தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிகள் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். இரவு உடுமலை அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.






