என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாட்டு மக்களின் நலனே எனது நலன்- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு
    X

    நாட்டு மக்களின் நலனே எனது நலன்- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் பேச்சு

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது.
    • கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.

    சென்னை:

    'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை சென்னை சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

    மருத்துவமனையில் இருந்தபோதும் அரசு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம் எப்படி நடக்கிறது என்பது குறித்த ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் பேசிக்கொண்டே இருந்தேன்.

    நாட்டு மக்களின் நலனே எனது நலன். மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றுவதே என் விருப்பம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தது. கொரோனா காலத்தில் அனைத்து அமைச்சர்களும், சுகாதாரத்துறை அமைச்சர்களாக மாறி பணியாற்றினர்.

    கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையை விருது கொடுத்து பாராட்டி உள்ளது.

    என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்கள் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் என்றார்.

    Next Story
    ×