என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.
    • தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.

    தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    * சோதனை எனக்கு புதிதல்ல சோதனையை வென்று வளர்ந்த என்னை எதிர்ப்போர் மனதுக்குள் மகிழ்ச்சி அடைந்து கொள்ளலாம்.

    * அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் எதிர்கொள்ளாத நெருக்கடியை நான் எதிர்கொண்டுள்ளேன்.

    * என்னை சீண்டி பார்ப்பவர்கள் மனதுக்குள் மகிழ்ச்சி அடையலாமே தவிர என்னை ஒன்றும் செய்ய முடியாது.

    * தேவையற்ற விமர்சனங்களை செய்தாலும் சட்டசபையில் சில ஆலோசனைகளை கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நன்றி.

    * 5 ஆண்டுகளாக மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு திட்டம் தீட்டி உழைத்திருக்கிறேன். உழைக்க காத்திருக்கிறேன்.

    * தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான். தமிழ்நாட்டு மக்கள் மீது கூடுதலாக நம்பிக்கை உள்ளது. இது தமிழ்நாட்டு மக்களின் முடிவு.

    * உறுதியாக சொல்கிறேன்... தமிழ்நாட்டில் மீண்டும் மீண்டும் தி.மு.க. ஆட்சிதான் அமையும்.

    * நாங்கள் தான் மீண்டும் வருவோம். மீண்டும் வருவோம். மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று கூறினார்.

    இதையடுத்து சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.

    Next Story
    ×