அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது - முதலமைச்சர்

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது - முதலமைச்சர்
Published on

உடுமலை:

உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது.

* அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?

* திருப்பூரில் கலைஞர் அறிவித்த 5 பாலங்கள் அமைக்க உத்தரவிட்ட நிலையில், பணியை முடக்கியது அ.தி.மு.க. ஆட்சி.

* அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட 3 ரெயில்வே பாலம் உள்பட 5 பாலங்கள் தி.மு.க. ஆட்சியில் மீண்டும் நடைபெறுகிறது.

* அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் பணி முடித்து செயல்படுத்தி வருகிறோம்.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சூப்பர் ஹிட் ஆனதை பொறுக்க முடியாமல் நீதிமன்றம் சென்றார் எடப்பாடி பழனிசாமி.

* ஊர் ஊராக சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் சென்று பொய்களை உரக்க பேசினால் மக்கள் நம்பிவிடுவர் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

* அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு நீதிமன்றத்தை நாடாதீர் என கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அபராதமும் விதித்தது.

* எடப்பாடி பழனிசாமி எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினார்?

* எந்த தைரியத்தில் திருப்பூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார் என தெரியவில்லை.

* அ.தி.மு.க.வின் தோல்விப்பயணம் இதே மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்கிவிட்டது என்றார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com