என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்கா இன்று திறக்கப்பட்டது.
    • பூங்காவில் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2011-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா, 58 ஏக்கர் பரப்பளவில் அடையாறு உப்பங்கழியை சீரமைத்து உருவாக்கப்பட்டது.

    கடந்த காலங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால், இந்தப் பூங்காவை மேம்படுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில், கடந்த ஜூலை 2021-ம் ஆண்டு சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை இந்தப் பூங்காவை மறுமேம்பாடு செய்ய திட்ட அறிக்கை தயாரித்தது. தமிழ்நாடு அரசு ரூபாய் 42.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கியது.

    இந்நிலையில் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பூங்கா இன்று திறக்கப்பட்டது.

    சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 58 ஏக்கரில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் இந்தப் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×