என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் பேச்சு
    X

    மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை - நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் குறித்து முதலமைச்சர் பேச்சு

    • என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.
    • கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.

    சென்னை:

    'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * உடல் நலமாக இருந்தால் தான் மகிழ்ச்சியோடு வாழ முடியும்.

    * இன்று தொடங்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    * எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம்.

    * என்னை பொறுத்தவரை அரசின் திட்டங்களை ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும்.

    * கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கும் சிறந்த மருத்துவம் கிடைக்க வேண்டும்.

    * நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய திட்டம்

    * மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின்

    *முகாமிற்கு வருவோரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக பாவித்து சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×