என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நயினார் நாகேந்திரன் தலைமையில் பா.ஜ.க. தேர்தல் மேலாண்மை குழு அமைப்பு
- தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.
சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் தேர்தல் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வருகின்ற சட்டசபை தேர்தல் 2026 சிறப்பாக எதிர்கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியானது பெருவாரியாக வெற்றி பெற்று, தமிழகத்தில் ஆட்சி அமைத்திடும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் களப்பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார்கள்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டமன்ற தேர்தலில், நமது கட்சியின் தேர்தல் பணிகளை கடந்த காலங்களைப் போல சிறப்பாக வழிநடத்திட, எனது தலைமையில் சட்டமன்ற தேர்தல் மேலாண்மைக் குழுவானது அமைக்கப்படுகிறது.
மேலாண்மைக் குழு அமைப்பாளர் - பொன். இராதாகிருஷ்ணன் (தேசிய செயற்குழு உறுப்பினர்)
இணை அமைப்பாளர் - எஸ்.ஆர்.சேகர் (மாநில பொருளாளர்)
இணை அமைப்பாளர் - ஆர்.என். ஜெயப்பிரகாஷ் (மாநில துணைத் தலைவர்)
இணை அமைப்பாளர் - மா. வெங்கடேசன் (மாநில துணைத் தலைவர்)
இணை அமைப்பாளர் - மாலா செல்வகுமார் (மாநில பொதுச் செயலாளர், ஓபிசி அணி)
இணை அமைப்பாளர் - எஸ்.ஆர். ராமப்பிரியன் (கட்சி உறுப்பினர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






