விஜயை கைது செய்... நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு

விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
விஜயை கைது செய்... நாமக்கல்லில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
Published on

கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து இந்த துயர சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்த விஜய், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்தார்.

இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, தமிழ்நாடு மாணவர் சங்கம் பெயரில் நாமக்கல் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த போஸ்டரில் "தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com