என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வின் A டீம்தான் விஜய்: கமலை போலவே அவரும் மாறுவார் - அர்ஜுன் சம்பத்
    X

    தி.மு.க.வின் A டீம்தான் விஜய்: கமலை போலவே அவரும் மாறுவார் - அர்ஜுன் சம்பத்

    • த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும்.
    • கமல்ஹாசன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார்.

    தேனியில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய திராவிடர் கழகம், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் எல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக கொண்டு வர வேண்டும் என்பதற்காக கொண்டு வந்ததுதான் த.வெ.க. கட்சி.

    பா.ஜ.க. பற்றி பேசுவதற்கு விஜய்க்கு எந்த அருகதையும் கிடையாது. த.வெ.க. கட்சி தமிழக மக்களால் புறக்கணிக்கப்படும். அவர் கிறிஸ்தவ நிறுவனங்களின் கைப்பாவையாக அவர் செயல்படுகிறார். தி.மு.க.வின் A டீம்தான் விஜய்.

    தி.மு.க. எப்படி மத்திய அரசு குறித்தும், மோடி குறித்தும் அவதூறு பரப்புகிறதோ அதேமாதிரிதான் தி.மு.க. செய்ய வேண்டிய வேலையை இன்னொரு தளத்தில் செய்கிறார்.

    கடந்த காலத்தில் கடந்த தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனை தயார் செய்தார்கள். இந்த தேர்தலுக்கு ஜோசப் விஜயை தேர்ந்தெடுத்து வைத்து இருக்கிறார்கள். அதனால் த.வெ.க. மக்களால் புறக்கணிக்கப்படும்.

    த.வெ.க. தலைவர் விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்பது எந்தவிதத்திலும் எதிரொலிக்காது. சாதக பாதகத்தை ஏற்படுத்தாது. அவர் நிச்சயமாக இந்த தேர்தலில் 2 அல்லது 3 சதவீத ஓட்டு வாங்குவார்.

    அதற்கு பிறகு மக்கள் நீதி மய்யம் போய் ராஜ்ய சபா சீட்டுக்காக தி.மு.க.வுடன் ஐக்கியமானதோ... மானஸ்தன் அல்லவா கமல்ஹாசன். அந்த மானஸ்தன் எப்படி தி.மு.க.வில் ஐக்கியமானாரோ அதேபோல் ஜோசப் விஜய் போய் ஐக்கியமாவார். எந்த பாதிப்பும் இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×