என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அண்ணாமலை
    X

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! அண்ணாமலை

    • குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி என இருள் சூழ்ந்து இருப்பதைப் பார்க்கிறோம்.
    • நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழக மக்கள் அனைவருக்கும், தமிழக பா.ஜ.க. சார்பாக இனிய 2025 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சிறந்த பாரம்பரியமும், கலாச்சாரமும், செழுமையும், வளமும் நிறைந்த தமிழகம் தற்போது, ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தால் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, பெருகி வரும் போதைப்பொருள்கள் புழக்கம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி என இருள் சூழ்ந்து இருப்பதைப் பார்க்கிறோம்.

    வரும் 2025 ஆம் ஆண்டு, தமிழகத்தைப் பீடித்துள்ள தீமை அகன்று வெளிச்சம் பிறந்திடவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகிடவும், நல் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும் ஆண்டாக அமைந்திடவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! என தெரிவித்துள்ளார்.



    Next Story
    ×