என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராமதாஸ் வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி - விசாரணை கோரும் அன்புமணி தரப்பு
- என் வீட்டிலேயே எனது பக்கத்திலேயே அதாவது நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர்.
- ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று விசாரணை நடத்த வேண்டும்.
கடலூர் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க பொதுக்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,
என் வீட்டிலேயே எனது பக்கத்திலேயே அதாவது நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவி வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்?, எதற்காக வைத்தார்கள்?, என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம். அந்த ஒட்டு கேட்கும் கருவி லண்டனில் இருந்து வந்துள்ளது. அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதனை நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம் என்று கூறினார்.
ராமதாசின் இந்த குற்றச்சாட்டால் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டு கேட்கும் கருவியை வைத்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என அன்புமணி தரப்பை சேர்ந்த பா.ம.க. செய்தித்தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டது உண்மை என்றால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று விசாரணை நடத்த வேண்டும்.
சைபர் பாதுகாப்பு வல்லுனர்களை உள்ளடக்கிய உயர்நிலை குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஒட்டு கேட்கும் கருவி வைத்ததன் பின்னணியில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.






