என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முன் அனுமதி பெறாமலேயே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா? - அன்புமணி கேள்வி
    X

    முன் அனுமதி பெறாமலேயே தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதா? - அன்புமணி கேள்வி

    • மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை;
    • ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

    மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் போது, தங்களின் கைகளில் எதுவும் இல்லை; இது மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவு என்று கூறி, அந்த ஆணையத்தை எல்லையில்லா அதிகாரம் பெற்ற அமைப்பைப் போன்ற தோற்றத்தை அரசும், மின்சார வாரியமும் ஏற்படுத்துகின்றன.

    ஆனால், மின்சாரக் கொள்முதல் போன்ற தங்களுக்கு சாதகமான விவகாரங்களில் ஒழுங்குமுறை ஆணையத்தை பொம்மை அமைப்பாக மாற்றி தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். இதேபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது. இனி வரும் காலங்களிலும் இத்தகையப் போக்கு தொடர்வதைத் தடுக்க தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களைப் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×