என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் விரைவில் குணமடைய வேண்டும் - அன்புமணி பிரார்த்தனை
- அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
- சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அன்புமணி ராமதாஸ் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கட்சி பணிகளை தீவிரப்படுத்த நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்.
பா.ம.க. கவுரவ தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணி திடீர் உடல் நலக்குறைவால் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார்.
அப்போது, பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, அருள் விரைவில் பூரண குணமடைய வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பிரார்த்தனை செய்தனர்.






