என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.வுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
    X

    த.வெ.க.வுடன் கூட்டணியா? - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

    • விஜயுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.
    • பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது.

    கூட்டணி குறித்து விஜயின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் ஓ.பி.எஸ். நேரடியாக பேசி வருவதாக தகவல் வெளியான நிலையில், ஓ.பி.எஸ். தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

    பா.ஜ.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அடுத்தகட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

    * நாளை சென்னையில் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறேன்.

    * த.வெ.க.வுடன் கூட்டணி உள்ளிட்ட கேள்விகளுக்கு நாளை பதில் சொல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×