என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காங்கிரஸுடன் கூட்டணி? 'நல்லதே நடக்கும்' - செங்கோட்டையன்
- செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்து, திமுகவுடனான கூட்டணியையே உறுதிப்படுத்தி வருகிறார்.
- பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால், காங்கிரஸ் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. ஆனால் தவெகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதற்கு பலமுறை மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்து, திமுகவுடனான கூட்டணியையே உறுதிப்படுத்தினாலும், இந்தப் பேச்சு தொடர்ந்துகொண்டே வருகிறது.
இச்சூழலில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெக தரப்பிலிருந்து காங்கிரஸிற்கு கூட்டணி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறினார். இதனிடையே தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்படும் முரண்பாடுகளால், பங்கீட்டில் அதிருப்தி ஏற்பட்டால், காங்கிரஸ் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக தவெக நிர்வாகி செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நல்லதே நடக்கும் என தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், சென்றவர்கள் அதிமுகவிற்கு திரும்புவார்கள் என்ற வேலுமணியின் பேச்சு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு,
அதிமுகவில் மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளிலும் யார் வேட்பாளர்கள் என்று அறிவிக்கட்டும். எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்று பாருங்கள். இங்கு எனக்கு என்ன மரியாதை கிடைக்கிறது என்பது உங்களுக்கு தெரியும், எனக்கு தெரியும்.
காங்கிரஸ் கூட்டணி தொடர்பான கேள்விக்கு, நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரைப் பொருத்தவரையில், சிறந்த ஆட்சியைத் தர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமன்றி, எல்லோரும் பண்பாளராக, எல்லோரும் நேசிக்கக் கூடியவராக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை என்று தெரிவித்தார்.






