என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வருகிற 15-ந்தேதி முதல் விருப்ப மனு வழங்கும் அ.தி.மு.க.
    X

    வருகிற 15-ந்தேதி முதல் விருப்ப மனு வழங்கும் அ.தி.மு.க.

    • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு பெறலாம்.
    • அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது.

    வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.

    அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×