என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

VIDEO: அதே டெய்லர், அதே வாடகை.. ஸ்டாலினை வாழ்த்திய ஆப்பிரிக்க பழங்குடியினர்.. காசு கொடுத்தால் வாழ்த்து?
- கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்ததாக கூறப்பட்டது.
- ஸ்டாலின் போட்டோவுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.
சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை தூக்கி வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் பாரம்பரிய நடனமாடிய வீடியோ வைரலானது.
10 கோடி ரூபாய் செலவில், 200 நிலமற்ற பட்டியல், பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம். ரூ 1000 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் உருவாக்கம் ஆகியன பழங்குடியின நலன் சார்ந்த திமுக அரசு திட்டங்கள் ஆகும்.
இந்த திட்டங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்து அவர்கள் ஸ்டாலினை வாழ்த்துவதாக அந்த வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பழங்குடிகள் காசு கொடுத்தால் யார் போட்டோவை வைத்தும் வாழ்த்துவார்கள் என அதுமுக, பாஜக தரப்பு சமூக வலைதள பக்கங்கள் விமர்சித்தன.
இந்நிலையில் இதை நிரூபணம் செய்யும் வகையில் ஜான் ரவி என்ற ஒருவரின் புகைப்படத்தை வைத்தும் பழங்குடியினர் ஸ்டாலினுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனால் எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.






