என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

2016-க்கு பின் தேர்தல் களம் அ.தி.மு.க.விற்கு போராட்டக்களம் ஆகிவிட்டது- செங்கோட்டையன்
- யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
- ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இது முக்கியமான நேரம், அமைதி காக்குமாறு கூறி பேசத் தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
* கடந்த 1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க.
* கிளைக் கழக செயலாளராக எனது பணியை அ.தி.மு.க. வில் தொடங்கினேன்.
* செய்தியாளர் சந்திப்பை முடித்துவிட்டு வெளியே வந்து பொதுமக்கள், தொண்டர்களுடன் உரையாற்றுவேன்.
* மக்கள் மனதில் குடிக்கொண்டிருக்கும் தலைவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
* என்னை பொருளாளராக நியமித்து பொதுக்குழுவை நடத்த எம்.ஜி.ஆர்.சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
* சத்யா ஸ்டூடியோவுக்கு என்னை அழைத்து மனதார பாராட்டியவர் எம்.ஜி.ஆர்.
* சத்தியமங்கலத்தில் என்னை போட்டியிடுமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.
* என்னுடைய பெயரை சொன்னால் மட்டும் போதும் தேர்தலில் வெற்றி பெறலாம் என எம்.ஜி.ஆர். கூறினார்.
* இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் என்ற பெயரை பெற்றவர் எம்.ஜி.ஆர்.
* யாராவது கட்சியை விட்டு சென்றால் அவர்களை நேரில் சென்று மீண்டும் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
* ஆளுமை, மக்கள் செல்வாக்கு மிக்க தலைமை தேவை என்பதால் ஜெயலலிதாவை ஆதரித்தோம்.
* திராவிடர்கள், ஆன்மீகவாதிகள் ஏற்றுக்கொள்ளும் ததலைமை பண்பை பெற்றிருந்தார் ஜெயலலிதா.
* ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுகவுக்கு சோதனை வந்த போது அனைவரும் சேர்ந்து சசிகலாவை அழைத்தோம்.
* சசிகலாவுக்கு பின் எடப்பாடி பழனிசாமியை நியமித்தோம்.
* எனக்கு 2 வாய்ப்புகள் இருந்தபோதும் இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்
* அ.தி.மு.க.வுக்காக பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறேன்.
* 2016-க்கு பின் தேர்தல் களம் போராட்டக்களம் ஆகி விட்டது என்பதை நாம் அறிவோம்.
* 2019, 2021, 2024 உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்த போது களத்தில் பிரச்சனை ஏற்பட்டது என்றார்.
முன்னதாக, கோபியில் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு முன்னர் செங்கோட்டையன் ரோடுஷோ நடத்தினார்.






