என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடிகை கஸ்தூரியும் திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தனர்
    X

    நடிகை கஸ்தூரியும் திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்தனர்

    • திருநங்கை நமிதா மாரிமுத்து பாஜகவில் இணைந்தார்.
    • இது தொடர்பான புகைப்படங்களை நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

    நடிகை கஸ்தூரி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவின் இணைந்தார். மேலும், திருநங்கை நமிதா மாரிமுத்துவும் பாஜகவில் இணைந்துள்ளார்.

    இதுகுறித்து நயினார் நாஜிந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நடிகை திருமதி.கஸ்தூரி அவர்களும், நடிகையும், சமூக செயற்பாட்டாளரும், Namis South Queen India நிறுவனத்தின் தலைவருமான திருநங்கை நமிதா மாரிமுத்து அவர்களும் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தமிழ்நாடு பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பெப்சி சிவா அவர்களின் முன்னிலையில், பாஜகவில் இன்று இணைந்தனர்.

    சமூக செயல்பாட்டாளரான திருமதி.கஸ்தூரி அவர்களும் நமீதா மாரிமுத்து அவர்களும் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அரசியல் பயணத்தில் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களுடைய அரசியல் பயணம் பாஜகவில் தொடங்கி இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்!" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×