என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட +2 மாணவி: உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம் - கனிமொழி
    X

    பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு துண்டாக்கப்பட்ட +2 மாணவி: 'உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்' - கனிமொழி

    • இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்கு சென்றவர் காணாமல் போனார்.
    • பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, துண்டு துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு துண்டு, துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால் இது ஏற்கனவே திட்டமிட்டு செய்யப்பட்டது என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு துணைநிற்போம் என்றும் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,

    "விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

    இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அச்சமூக விரோதிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைத்திட துணை நிற்போம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×