என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓசூரில் கொரியர் மூலம் கேரளாவிற்கு 2 கிலோ கஞ்சா அனுப்ப முயன்ற 2 வாலிபர்கள் கைது
    X

    ஓசூரில் கொரியர் மூலம் கேரளாவிற்கு 2 கிலோ கஞ்சா அனுப்ப முயன்ற 2 வாலிபர்கள் கைது

    • கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
    • வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதி, கர்நாடக, ஆந்திரா ஆகிய இருமாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள பகுதி என்பதால் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்துவதை தடுப்பது, குற்றச்சம்பவங்களை குறைப்பது என்பது போலீசாருக்கு சவாலானதாக இருந்து வருகிறது.

    இந்தநிலையில், ஓசூர் பகுதியில் கொரியர் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ஒசூர் ரிங் ரோடு பகுதியில், இரண்டு நாட்களாக நோட்டமிட்டதில், கஞ்சா பார்சலை கொரியர் செய்ய வந்த இருவர் 2 கிலோ கஞ்சாவுடன் கையும் களவுமாக சிக்கினர்.

    இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அபிலாஷ் (வயது21), விஷ்ணு சத்தியா (23) என தெரியவந்துள்ளது.

    மேலும் அவர்கள், ஓசூர் அருகே பேளகொண்டப் பள்ளியில் தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து கொண்டு ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து அறையில் பதுக்கி வைத்து ஓசூர், தேன்கனிக்கோட்டை பகுதியில் சில்லரையாக கஞ்சா விற்றதும், கேரளாவிற்கு கிலோ கணக்கில் கொரியர் அனுப்பி வந்ததும் தெரியவந்தது.

    போலீசார், அந்த வாலிபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டதில் மேலும் 30 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 32 கிலோ கஞ்சாவை கைப்பற்றியதுடன் அவர்கள் இருவரையும் நுண்ணறிவு பிரிவு போலீசார், ஓசூர் போதைபொருட்கள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×