search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாஜகவுக்கு திருச்சியில் டெபாசிட் கிடைக்காதா? - திருச்சி சூர்யாவுக்கு ராம ஸ்ரீனிவாசன் பதிலடி
    X

    பாஜகவுக்கு திருச்சியில் டெபாசிட் கிடைக்காதா? - திருச்சி சூர்யாவுக்கு ராம ஸ்ரீனிவாசன் பதிலடி

    • தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது

    தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    பாஜக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம சீனிவாசன் திருச்சி தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் பரவியது. திமுக கூட்டணியில் திருச்சியில் மதிமுக வேட்பாளராக துரை வைகோ களமிறங்குகிறார். அவரை எதிர்த்து, பேராசிரியர் இராம. சீனிவாசனை களத்தில் இறக்குவது பற்றி பாஜக தலைமை ஆலோசித்து வருவதாக சொல்லப்பட்டது.

    பாஜகவின் இந்த முடிவை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "வரும் தேர்தலில் திருச்சி தொகுதிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இராம. சீனிவாசனை திருச்சியில் களமிறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும். வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக, மண்ணின் மைந்தரை களமிறக்கினால் திருச்சியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இப்படிக்கு - பாஜகவின் உண்மைத் தொண்டன் திருச்சி சூர்யா' எனத் தெரிவித்திருந்தார்.

    இதற்கு ராம ஸ்ரீனிவாசன் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில், "அரசியல் பணியாற்றுவோர் மண்ணின் மைந்தனாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த மண்ணுக்கான மைந்தனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம். நான் மண்ணுக்கான மைந்தன் என திருச்சி சூர்யாவின் பெயரை குறிப்பிடாமல் ராம சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

    Next Story
    ×