என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு
    X

    அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்- சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு வைகோ வரவேற்பு

    • உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம்.
    • சென்னை ஐகோர்ட்டு பாராட்டத்தக்க இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல், உரிய பயிற்சி பெற்ற அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் பணியில் நியமிக்கலாம் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக சுப்பிரமணிய குருக்கள் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்தத் தீர்ப்பினை அறிவித்துள்ளார்.

    சென்னை ஐகோர்ட்டு பாராட்டத்தக்க இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது. அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் படித்து, அரசு நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி இல்லாமல் வேதனையோடு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கின்ற அர்ச்சகர்களை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை உடனடியாக பணியில் நியமிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×