என் மலர்

  தமிழ்நாடு

  விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்
  X

  விழுப்புரம் அருகே இன்று காலை தனியார் பஸ் கவிழ்ந்து 30 பயணிகள் காயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.
  • வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  விழுப்புரம்:

  திண்டிவனத்திலிருந்து நெய்வேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று இன்று காலை வந்தது. இந்த பஸ்சை திண்டிவனம் அருகே சித்தனி பகுதியை சேர்ந்த சபரிநாதன் (வயது 31) டிரைவர் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பஸ் 30-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிகொண்டு சென்னை-கும்பகோணம் சாலையில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி என்ற இடத்தில் பஸ் வந்தபோது பஸ் எதிரே மோட்டார் சைக்கிள், கார் வந்தது. அப்போது பஸ்சை மோட்டார் சைக்கிள், கார் மீது மோதாமல் இருக்க பஸ்சின் டிரைவர் சபரிநாதன் சடன் பிரேக் போட்டுள்ளார்.

  அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பலுதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது, பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். மேலும் 30 பயணிகள் காயம் அடைந்தனர். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

  தகவல் அறிந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்த பயணிகளை அமைச்சர் பொன்முடிடி நேரில் சென்று பார்வையிட்டார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அந்த பகுதியில் பரபரபாக உள்ளது.

  Next Story
  ×