என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

யாருடன் கூட்டணி? ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்- பிரேமலதா
- விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு கட்சியினரிடம் வழங்கினார்.
- இன்றும், நாளையும் விருப்பமனு வழங்கப்படுகிறது.
சென்னை:
தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்களை வழங்கினார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து விருப்ப மனுக்களை வணங்கி விட்டு அவர் கட்சியினரிடம் வழங்கினார். பின்னர் தேர்தல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறோம்.
இன்று விருப்ப மனுக்களை வழங்கி உள்ளோம். தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது பற்றி நாளை மறுநாள் (21-ந்தேதி) எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.
Next Story






