search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்  ஊதிய தொகை ரூ.400-ஆக உயர்த்தப்படும்- தி.மு.க. தேர்தல் அறிக்கை
    X

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் ஊதிய தொகை ரூ.400-ஆக உயர்த்தப்படும்- தி.மு.க. தேர்தல் அறிக்கை

    • இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

    சென்னை:

    தி.மு.க. தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    * வேளாண் விளைபொருள்களுக்கு மொத்த உற்பத்திச் செலவு பிளஸ் 50 சதவீதம் என்பதை வலியுறுத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் (MSP) செய்யப்படும்.

    * இந்தியா முழுவதும் மாணவர்கள் பெற்ற கல்விகடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * விமானக் கட்டணம் நிர்ணயிப்பது முறைப்படுத்தப்படும்.

    * பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படாது.

    * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து150-ஆகவும், ஊதியத்தை ரூ.400-ஆகவும் உயர்த்தப்படும்.

    * மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான IIT, IIM, IISc, IIARI ஆகியவை தமிழ்நாட்டில்புதியதாக அமைக்கப்படும்.

    * பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்படும்.

    * ஒரே நாடு -ஒரே தேர்தல் திட்டம் கைவிடப்படும்.

    * மாணவர்களுக்கு வட்டியில்லாத கல்விக் கடனாக 4 லட்சம் வரை வழங்கப்படும்.

    * ரெயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படும்.

    * இஸ்லாமியர் மற்றும் இதர சிறுபான்மையினர் மேம்பாடு குறித்து ஆராய்ந்த சச்சார் கமிட்டி பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.

    * சென்னையில் மூன்றாவது ரெயில் முனையம் அமைக்கப்படும்.

    Next Story
    ×