search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,196 நர்சுகள் பணி நிரந்தரம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,196 நர்சுகள் பணி நிரந்தரம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • காலியாக உள்ள பணியிடங்களுக்கு நர்சுகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
    • எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது. அதனை முதலமைச்சர் எதிர்கொள்வார்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.15.50 கோடி மதிப்பீட்டில் பேறுகால பச்சிளங்குழந்தை சிகிச்சை பிரிவின் கூடுதல் தளங்கள் கட்டுவதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சுகாதாரத்துறையில் உள்ள காலி பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 மாதங்களில் 1021 மருத்துவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமிக்கப்பட்டனர்.


    கொரோனா காலத்தில் எம்.ஆர்.பி. மூலம் நியமிக்கப்பட்ட 977 நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். காலியாக உள்ள பணியிடங்களுக்கு நர்சுகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் 2015-ம் ஆண்டு எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 483 ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுகின்றனர். இதே போல 2019 கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட 977 நர்சுகளும் நிரந்தரப்பணியில் நியமிக்கப்படுகிறார்கள்.

    ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1196 நர்சுகளுக்கு நிரந்தர பணி ஆணை நாளை வழங்கப்படுகிறது. கிண்டியில் உள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தமிழகத்தில் கவர்னர் அரசியல் செய்கிறார். கஞ்சா செடி எதுவும் இங்கு பயிரிடப்படவில்லை. ஆந்திராவில் பயிரிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த அச்சுறுத்தலுக்கும் தி.மு.க. பயப்படாது. அதனை முதலமைச்சர் எதிர்கொள்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சங்குமணி, மண்டல குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×