search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி? தமிழக அரசு இன்று தீவிர பரிசீலனை
    X

    மழை வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி? தமிழக அரசு இன்று தீவிர பரிசீலனை

    • இன்னும் சில தினங்களிலேயே வெள்ள நிவாரண தொகை தொடர்பாக அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட கடும் பாதிப்பால் மக்கள் பெரிய அளவில் சிரமத்தை சந்தித்துள்ளனர். கீழ் தளத்தில் வசித்த பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள்.

    இதையடுத்து வெள்ள பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரண நிதியை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வெள்ள நிவாரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. வெள்ள நிவாரண தொகை இந்த மாத இறுதிக்குள்ளாகவே வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் வெள்ள பாதிப்புகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு வெள்ள நிவாரண தொகையை எப்போது முடிவு செய்து அறிவிக்கும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட தொடங்கியுள்ளது.

    இதனை கருத்தில் கொண்டு இன்னும் சில தினங்களிலேயே வெள்ள நிவாரண தொகை தொடர்பாக அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது குடிசைகளை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரமும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.5 ஆயிரமும் நிவாரண தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×