search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோர்ட்டுக்கு அறிவுரை சொல்ல அண்ணாமலைக்கு அதிகாரம் தந்தது யார்? கே.எஸ்.அழகிரி கேள்வி
    X

    கோர்ட்டுக்கு அறிவுரை சொல்ல அண்ணாமலைக்கு அதிகாரம் தந்தது யார்? கே.எஸ்.அழகிரி கேள்வி

    • நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.
    • தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    சென்னை:

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அதை தொடர்ந்து ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற 30-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறும் போது, அவர் அமைச்சராக நீடிப்பதால்தான் ஜாமின் கிடைக்கவில்லை. அமைச்சரவையில் இருந்து நீக்கினால் உடனடியாக ஜாமின் கிடைக்கும் என்றார்.

    இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:-

    நீதிமன்றங்கள் என்ன செய்ய வேண்டும். எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றியோ நீதியை பற்றியோ யாரும் பேசக்கூடாது.

    நீதிபதிகளுக்கு பதிலாக பேசும் தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. ஆனால் நீதிபதிகளுக்கு அறிவுரை சொல்லும், உத்தரவு போடும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு யார் கொடுத்தது என்பதை மோடிதான் விளக்க வேண்டும்.

    அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டு வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டவர். சேலம் முதல் கொங்குமண்டலம் முழுவதும் அவர் இருக்கும் வரை தி.மு.க. கூட்டணியை வெல்ல முடியாது என்பது தெரியும். அதனால் திட்டமிட்டு அவரை குறிவைத்து கைது செய்துள்ளார்கள்.

    பா.ஜனதா மாநில தலைவர்கள் ஐகோர்ட்டு நீதிபதிகளா? தனித்து போட்டியிடுவோம் என்று வாய் சவடால் விடும் அண்ணாமலைக்கு தைரியும் இருந்தால் தனித்து போட்டியிட்டு பார்க்கட்டும்.

    செந்தில் பாலாஜி வழக்கில் நீதி வெல்லும். அவர் ஜாமினில் மட்டுமல்ல வழக்குகளில் இருந்தும் விடுதலை ஆவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×