என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்
    X

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்

    • கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும்.
    • பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு பொதுச் செயலாளர் அருணாசலம், மாநில செயலாளர்கள் செந்தில் ஆறுமுகம், சிவ.இளங்கோ, கவிஞர் சினேகன், ஸ்ரீதர், முரளி அப்பாஸ், நடிகை ஸ்ரீபிரியா மற்றும் சினேகா மோகன் தாஸ், மயில்சாமி, ஜான்சன், மயில்வாகனன், மண்டல செயலாளர்கள் ஸ்ரீபதி, கோபிநாத், அழகர் பிரேம், ரங்கநாதன், அருண், நாகராஜ், வைத்தீஸ்வரன், அனுஷா, மூகாம்பிகை, ராதா, காந்தி கண்ணதாசன், அர்ஜுனர், ராகேஷ், சைப், பிரதீப் குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். விரைவில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். கூட்டணி அமைத்து நாம் தேர்தலில் போட்டியிட்டாலும் கட்சி நிர்வாகிகள் பூத் கமிட்டிகளை அமைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    கட்சியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி தலைமையிடமே தெரிவிக்க வேண்டும். செயல்படாத கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். எனவே கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் தொடர்பாக துணை தலைவர் மவுரியா கூறும்போது, "பாராளுமன்றத் தேர்தலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பிரசார வியூகம் மற்றும் தலைவரின் சுற்றுப் பயணம் ஆகியவை பற்றியும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.

    Next Story
    ×