search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களுக்கு குறி வைக்கும் காங்கிரஸ்
    X

    உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. கூட்டணியில் கூடுதல் இடங்களுக்கு குறி வைக்கும் காங்கிரஸ்

    • டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.
    • விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி வலுவாக இருந்தது. தொகுதிகள் பங்கீடு தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகே உடன்பாடானது.

    இந்தநிலையில் தேர்தலுக்காகத்தான் கூட்டணி. முதலில் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த பாருங்கள் என்று ராகுல்காந்தி கூறி இருக்கிறார்.

    இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாவட்ட வாரியாக சென்று கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார். அப்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார்கள்.

    இந்த நிலையில்தான், கொடுக்கும் நிலையில் இருந்த காங்கிரஸ் இடங்களை கெஞ்சி கேட்டு வாங்கும் நிலையில் உள்ளது. 57 ஆண்டுகளை வீணடித்து விட்டோம் என்று செல்வப் பெருந்தகை கூறினார்

    இதுபற்றி தி.மு.க. தரப்பில் ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, "காங்கிரசுக்கு புதிய தலைவர்கள் வரும் போது இந்த மாதிரி தங்கள் கருத்துக்களை பேசுவது வழக்கமானதுதான் என்று குறிப்பிட்டார்.

    இந்த சூழலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க. நல்லாட்சி நடத்துகிறது. அதுவும் காமராஜர் ஆட்சிதான் என்றார்.

    தலைவர்கள் வெளியிட்ட மாறுபட்ட கருத்துக்கள் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் டெல்லியில் பேசிய காங்கிரஸ் தலைவர் கார்கே, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த கூட்டணி தொடரும் என்றார்.

    இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, தலைவர்கள் மட்டத்தில் இந்த கூட்டணி வலிமையான கூட்டணி. இப்படியே தொடர வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதேநேரம் கீழ் மட்டத்தில் தங்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நிலவி வருகிறது.

    எனவே விரைவில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலாவது காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதனால்தான் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள் என்றார்.

    Next Story
    ×