search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது தி.மு.க. தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    பாராளுமன்ற தேர்தலில் வெல்லப்போவது தி.மு.க. தான்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள்.
    • செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    சென்னை:

    ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இல்லத் திருமணம் சென்னை ஆர்.ஏ.புரம் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மணமக்கள் ராமன்-அக்ஷயசெல்வி திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. மக்கள் பணியை எப்போதும் தொய்வின்றி செய்து வருகிறது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்கள் பணியை எந்த அளவுக்கு ஆற்றி உள்ளதற்கு ஒரே உதாரணம், கொரோனா காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்க கூடிய வகையிலே, "ஒன்றிணைவோம் வா" என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ, அவை அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சி தான் இன்றைக்கு ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடிய தி.மு.க. என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.

    அதில் முடிந்த அளவுக்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கப்பாண்டியன் போன்றவர்கள், அவரது தொகுதியிலே உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் தலைமை கழகம் மூலமாக நானும் அறிந்தவன்.

    தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களைப் பற்றி கவலைப்படுகிற கட்சி தான் தி.மு.க. அதனால் தான் தொடர்ந்து நாம் வெற்றியை பெற்று வருகிறோம்.

    பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள்.

    அதற்கு பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலே 6-வது முறையாக நம்முடைய தி.மு.க. ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள்.

    ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.

    அதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம்.

    இப்படி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப்போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதி மொழிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றி காட்டி இருக்கிறோம்.

    இன்னும் சொல்கிறேன் 100-க்கு 99 சதவீதம் இதுவரையிலே நாம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மிச்சம் இருக்கக்கூடிய 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இப்படி எத்தனையோ திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு விடியல் திட்டம் என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

    அதற்கு பிறகு புதுமைப் பெண், பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம். அதையும் நிறைவேற்றி இருக்கிறோம். நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் அளவுக்கு பயிற்சி தரும் அளவுக்கு இந்த திட்டம் செயலாற்றி கொண்டிருக்கிறது.

    வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் பெயரால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் நான் தான் தொடங்கி வைக்க போகிறேன்.

    அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த தொகையை பெற உள்ளனர். இதில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவிக்கிறேன்.

    அதேபோல் எப்படி தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை உருவாக்கி தந்தீர்களோ அதேபோல் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வரப்போகிறதா? அல்லது அதற்கு முன்பே வந்து விடுமா? என்ற ஒரு எண்ணம், சந்தேகம் வந்து கொண்டிருக்கிறது.

    ஆக முன்கூட்டியே வந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×