என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
- வரும் 4-ந்தேதி புயலானது சென்னை-மச்சிலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை.
சென்னை:
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மறுநாள் (3-ந்தேதி) புயலாக வலுப்பெறும். வரும் 4-ந்தேதி இந்த புயலானது சென்னை-மச்சிலிப்பட்டினம் இடையே ஆந்திராவில் கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் முன்னெச்சரிகை நடவடிக்கைகள் தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார்.
புயல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை துரிதப்படுத்துவது குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






