search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.-வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி?
    X

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.-வுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி?

    • தமிழகத்தில் புதிய தேர்தல் கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    • அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தனித்து தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சிகள் இடையே இருந்து வந்த கூட்டணி முறிந்து விட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகி விட்டது.

    கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் தலைவர்கள் பற்றி தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ச்சியாக அவதூறாக பேசியது, கொள்கைகளை விமர்சித்தது உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, பா.ஜ.க.-வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. தெரிவித்து இருக்கிறது. மேலும், பா.ஜ.க. மட்டுமின்றி, அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் அ.தி.மு.க. விலகியுள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியுள்ளதால், தமிழகத்தில் புதிய தேர்தல் கூட்டணி உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் புதிய கூட்டணியும் உருவாகும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில், வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகள் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இரண்டு திராவிட கட்சிகளை எதிர்த்து களம்காண வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

    அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தனித்து தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. மீண்டும் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

    Next Story
    ×