என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024

    • ரூ. 17,616 கோடி முதலீட்டில் உருவான 19 திட்டங்கள் தொடங்கி வைப்பு.
    • ரூ. 51,157 கோடி முதலீட்டில் உருவாக இருக்கும் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா.

    சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற்று வருகிறது. இதில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் பெற்றது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    Live Updates

    • 21 Aug 2024 12:01 PM IST

      திறன்மிகு தொழிலாளர்கள், அதிக பெண் தொழிலாளர்கள் கொண்ட சிறப்பம்ச மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்பது உலகம் முழுக்கத் தெரியும். உலகமெங்கும் இருக்கும் முதலீட்டார்கள் தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு இன்றைய நிகழ்வு எடுத்துக்காட்டு. மிகுந்த படைப்பாற்றம், திறமை கொண்டவர்கள் துடிப்பான தமிழக இளைஞர்கள். நம்முடைய இளைஞர்கள் இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதனால் எங்களுடைய இளைஞர்களின் திறன்களை நன்றாக பயன்படுத்துக் கொள்ளுங்கள் என்ற அன்பாக கேட்டுக்கொள்கிறேன். - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:54 AM IST

      நீங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்கினால் மட்டும் போதாது. மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாட்டின் தொழில்துறை தூதுவராக நீங்கள் அனைவரும் மாற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

      இந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற தொழில்துறைகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலம் இலக்கை அடைவதற்காக தமிழக அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.

      இன்று தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் மூலம் 106803 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பெரும்பாலான வேலைவாய்ப்பு பெண்களுக்கானவை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசு நடவடிக்கைக்க இந்த சாதனை ஊக்கமளிக்கிறது.

      அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி, அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சி நான் சொல்லிக் கொண்டு வருவதின் அடையாளம் இதுதான். தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்க தக்க வளர்ச்சி உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:42 AM IST

      அமைதியான, சட்டம் ஒழுங்கு சரியாக உள்ள மாநிலங்களை தேடித்தான் தொழில் நிறுவனங்கள் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் தொழிலை நிம்மதியாக நடத்தலாம் என்ற நம்பிக்கை தொழில் அதிபர்களுக்கு வந்துள்ளது. அதன் அடையாளமாகத்தான் கடந்த 3 வருடங்களாக தமிழகத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகிறது. - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:39 AM IST

      28 வகையிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். 51,157 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலம் 41 ஆயிரத்து 135 பேருக்கு வேலை கிடைக்கும் என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்- - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:37 AM IST

      19 வகையிலான திட்டங்களை இன்று தொடங்கி வைத்திருக்கிறேன். 17616 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மூலம் 64968 பேருக்கு வேலை கிடைக்கும்.- முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:34 AM IST

      கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்- முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:32 AM IST

      அந்த மாநாடு மூலம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எண்ணிக்கை 631. இதனால் 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் - முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:28 AM IST

      மாநாடுகளை நடத்துவதை விட, அவற்றின் மூலம் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.- முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:27 AM IST

      கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம்- முதல்வர் மு.க. ஸ்டாலின்

    • 21 Aug 2024 11:26 AM IST

      தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதை உணர்த்திடும் நாளாக இந்த நாள் அமைந்துள்ளது- முதல்வர் மு.க. ஸ்டாலின்

    Next Story
    ×