என் மலர்

நீங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்கினால் மட்டும்... ... லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024
நீங்கள் தொழில் நிறுவனங்கள் தொடங்கினால் மட்டும் போதாது. மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்துக் கொண்டு வாருங்கள். தொழில் தொடங்க வையுங்கள். தமிழ்நாட்டின் தொழில்துறை தூதுவராக நீங்கள் அனைவரும் மாற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற தொழில்துறைகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலம் இலக்கை அடைவதற்காக தமிழக அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இன்று தொடங்கப்பட்ட, அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் மூலம் 106803 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப் போகிறது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் பெரும்பாலான வேலைவாய்ப்பு பெண்களுக்கானவை. பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் அரசு நடவடிக்கைக்க இந்த சாதனை ஊக்கமளிக்கிறது.
அனைத்து துறை வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி, அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சி நான் சொல்லிக் கொண்டு வருவதின் அடையாளம் இதுதான். தமிழ்நாடு முழுவதும் பரவலான மற்றும் நிலைக்க தக்க வளர்ச்சி உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. - முதல்வர் மு.க. ஸ்டாலின்






