என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
லைவ் அப்டேட்ஸ்: தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024
- ரூ. 17,616 கோடி முதலீட்டில் உருவான 19 திட்டங்கள் தொடங்கி வைப்பு.
- ரூ. 51,157 கோடி முதலீட்டில் உருவாக இருக்கும் 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா.
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 நடைபெற்று வருகிறது. இதில் முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் பெற்றது. அதோடு 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
Live Updates
- 21 Aug 2024 11:10 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள ரெனால்டு நிஷான் டெக்னாலாஜி அண்டு பிசினஸ் சென்டரை தொடங்கி வைத்தார்.
- 21 Aug 2024 11:07 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள தொழிற்பூங்காவை தொடங்கி வைத்தார். மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
- 21 Aug 2024 10:55 AM IST
டிவிஸ் இந்தியன் (லூகாஸ் டிவிஎஸ்)
2850 கோடி ரூபாய் முதலீட்டில் 800 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் மின்சார பேட்டரி பேக் தயாரிப்பு யுனிட் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
- 21 Aug 2024 10:50 AM IST
சாதனைகளே உருவாக, சாதிப்பதை இலக்காக கொண்ட தமிழக முதலமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தொழில்துறையின் சாதனைகள் குறும்படம் திரையிடப்பட்டது.













