என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு ஜாமின்?: அமலாக்கத்துறை எதிர்ப்பு
- செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
- பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.
சென்னை:
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ள நிலையில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை மனுவில்,
* செல்வாக்கு மிக்கவரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளை அச்சுறுத்தக்கூடும்.
* செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்னும் தலைமறைவாகத்தான் உள்ளார்.
* ஆவணங்களை திருத்தியதாக செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தவறு.
* பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.
* செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
* செந்தில் பாலாஜி தான் வழக்கின் விசாரணையை தொடங்க விடாமல் தாமதப்படுத்தி வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் இன்று பிற்பகல் ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது.






