என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருச்சி என்றாலே திருப்புமுனை, இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது: மு.க.ஸ்டாலின்
- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கினார்.
- அப்போது ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை என்றார்.
திருச்சி:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிறுகனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திருச்சி என்றாலே திருப்புமுனை. இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது.
40க்கு 40 தொகுதிகளில் நாம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.
இந்தியாவே பாராட்டடும் நல்லாட்சியை நடத்தி வருகிறோம்.
தேர்தல் வருவதால் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருப்பார்.
ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை.
3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல இன்று ஒருநாள் போதாது.
மகளிர் உரிமை திட்டத்தல் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.
காலை உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.
நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் பயன்
மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.






