என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைவரான பின் தொடரும் தி.மு.க.வின் வெற்றி பயணம்
- தி.மு.க. தலைமைப் பொறுப்பை கடந்த 2018-ம் ஆண்டில் ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- முதல் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 இடங்களில் மு.க.ஸ்டாலின் வெற்றி தேடித்தந்தார்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு மறைந்தார். அதன்பின், தி.மு.க. தலைமைப் பொறுப்பை ஏற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலே தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் முதல் தேர்தல். இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 இடங்களில் தி.மு.க. கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் வெற்றி தேடித்தந்தார்.
2019 பாராளுமன்ற தேர்தல், 21 தொகுதிகள் சட்டசபை இடைத்தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் என எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க.விற்கு வெற்றி தேடிக்கொடுத்தார் மு.க. ஸ்டாலின்.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களிக்காதவர்கள், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என நினைக்கும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நடத்துவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அப்போது தி.மு.க.விற்கு வாக்களிக்கத் தவறியவர்கள் அந்த ஏக்கத்தை தற்போதைய பாராளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக திரண்டு வந்து வாக்களித்து உள்ளனர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை விரும்பாத ஆளுநரை நியமித்தது, பிரதமர் மோடி, அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை தமிழ்நாட்டிற்கு எதிராக அவதூறு விஷமப் பிரசாரம் செய்தது போன்ற நெருக்கடிகளை பா.ஜ.க. கொடுத்தபோதும் மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், காலை சிற்றுண்டி, புதுமைப் பெண் என ஏராளமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.
தி.மு.க.வை வழிநடத்தும் தலைவர் பொறுப்பை ஏற்றதில் இருந்து இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே சொந்தமாக்கி வருகிறார் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் சுமார் 100 சதவீத வெற்றியை மு.க.ஸ்டாலின் தேடித்தந்துள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக இந்தியா கூட்டணியை உருவாக்க விதை போட்டது தி.மு.க.தான் என்பது குறிப்பிடத்தக்கது.






