என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் தமிழக கல்வி முறையை குறை சொல்கின்றனர்- உதயநிதி ஸ்டாலின்
- தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகளாகவும், மிகப்பெரிய மருத்துவராகவும் உள்ளனர்.
- மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.
சென்னை:
சென்னை மறைமலை நகரில் நடைபெற்ற திமுக நிர்வாகி திருமண விழாவில் திமுக இளைஞர் அணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
* இந்தியாவிலேயே சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டில் தான்.
* தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் இன்று பல்வேறு தளங்களில் உயர்ந்த நிலையில் உள்ளனர். தமிழக பாடத்திட்டத்தில் படித்தவர்கள் விஞ்ஞானிகளாகவும், மிகப்பெரிய மருத்துவராகவும் உள்ளனர்.
* சில வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் இதை ஏற்க முடியாமல் தான் மாநில அரசின் கொள்கை மீது குற்றம் சொல்கிறார்கள்.
* ஆசிரியர் பணி அறிவார்ந்த தலைமுறையை உருவாக்கும் பணி.
* தமிழக பாடத்திட்டத்தை யார் குறை சொன்னாலும் ஏற்க முடியாது.
* தமிழ்நாடு பாடத்திட்ட முறையை குறை கூறினால் தமிழக ஆசிரியர்கள், மாணவர்களை அவமதிப்பதற்கு ஒப்பாகும்.
* மாணவர்களை சுயமாக சிந்தித்து செயல்பட தூண்டுவதுதான் சிறந்த கல்வி முறை.
* தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயில்பவர்கள்தான், வருங்காலத்திலும் சிறந்து விளங்குவார்கள் என உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்.
தமிழக கல்வி முறையின் தரம் மோசம் என கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருந்த நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.