search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்டைக் கொடுமை படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் - அண்ணாமலை வேண்டுகோள்
    X

    "ஆட்டைக் கொடுமை படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள்" - அண்ணாமலை வேண்டுகோள்

    • திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள் - அண்ணாமலை
    • தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம் - டி.ஆர்.பி.ராஜா

    கோவை தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, "திமுகவினருக்கு என்மீது எவ்வளவு பயம் இருந்தால் ஆட்டுக்குட்டி போன்ற விமர்சனங்களை செய்வார்கள். அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா போன்றவர்களால் என்னைப் போல வியர்வை சிந்தி உழைக்க முடியுமா? ஆட்டைக் கொடுமைப்படுத்தாமல் பிரியாணி செய்யுங்கள் இதுதான் என அன்பான வேண்டுகோள் என்று தெரிவித்தார்.

    மேலும், தினம் ஒரு வார்த்தை, தினம் ஒரு தத்துவம் என்ற பாணியில் சீமான் அரசியல் நடத்துகிறார். சின்னம் கிடைக்காததால், தொண்டர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். தன்னுடைய தவறை மறைப்பதற்காக தினமும் என்னையும், பாஜகவையும் சீமான் விமர்சிக்கிறார். அவர் செய்த தவறுக்காக தினமும் எங்கள் மீது பழிபோட்டால் எப்படி எனக் கேள்வி எழுப்பினார். மேலும் சீமான் சின்னத்திற்காக முறையாக விண்ணப்பிக்கவில்லை.

    பிரதமர் ரோடு ஷோ நடத்தி உள்ளார். அமித்ஷா நாளை தேனியில் ரோடு ஷோ நடத்துகிறார். முக்கிய நகரில் பிரதமர் மீண்டும் ரோடு ஷோ நடத்த உள்ளார். அதனை ஏன் முதல்வர் செய்யவில்லை. ‛ ரோடு ஷோ' வை முதல்வர் ஸ்டாலின் நடத்தட்டும். தமிழகத்தில் எந்த நகரையாவது முதல்வர் தேர்வு செய்து 10 கி.மீ., தூரம் ரோடு ஷோ நடத்தட்டும். எத்தனை பேர் வருகிறார்கள் என்பதை பார்ப்போம். நான் சவால் விடுக்கிறேன். ரோடு ஷோ நடத்த முதல்வருக்கு ஏன் பயம்?

    29 பைசா மோடி என உதயநிதி பேசினால், அவரை பீர், சாராயம், டாஸ்மாக், ட்ரக் உதயநிதி என்று அழைப்போம். நாங்கள் மரியாதைக்காக அமைதியாக இருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "தேர்தல் முடிந்த பிறகு பிரியாணி போட திட்டமிட்டிருந்ததாகவும் தற்போதுதான் தெரிந்தது கோவையில் மட்டன் பிரியாணியாம்.. சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது என அண்ணாமலை மறைமுகமாக சீண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×