என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

கொலை செய்யப்பட்ட தங்கம்மாள், கைதான தமிழ்செல்வன், மணிகண்டன்.
கஞ்சா போதையில் பாட்டியை கத்தியால் குத்தி கொன்ற பேரன்- நண்பருடன் கைது

- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி உப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குஞ்சப்பன். இவரது மனைவி தங்கம்மாள் (65). இவர்களுக்கு கோவிந்தராஜ் (40) என்ற மகனும், பவளக்கொடி (38) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
தங்கம்மாளின் கணவர் குஞ்சப்பன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு மாயமாகிவிட்டார். இதனால் தங்கம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தங்கம்மாளின் மகள் பவளக்கொடி தனது கணவர் முருகேசனிடம் கோபித்துக்கொண்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து பவளகொடியின் கணவர் முருகேசன் மதுபோதையில் வந்து என்னுடன் குடும்பம் நடத்த வரவேண்டும் இல்லை என்றால் இங்கேயே இறந்து விடுவேன் என கூறி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் பவளக்கொடியின் மகன் தமிழ்ச்செல்வன் நேற்று இரவு தனது நண்பர் மணி என்பவருடன் பாட்டி தங்கம்மாள் வீட்டிற்கு வந்து உள்ளார். அங்கு பாட்டி சமைத்து கொடுத்ததை சாப்பிட்டு விட்டு இரவு 12 மணி அளவில் கஞ்சா போதையில் இருந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் மணி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென பாட்டி தங்கம்மாளின் மார்பு பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது தங்கம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது நண்பர் மணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து தமிழ்ச்செல்வனிடம் போலீசார் விசாரித்த போது எனது தந்தையின் சாவுக்கு காரணமான பாட்டி தங்கம்மாள் தாய் மாமன் கோவிந்தராஜ், தாய் பவளக்கொடி ஆகிய 3 பேரையும் கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி வந்ததும் பாட்டியை கொலை செய்வதற்குள் அக்கம் பக்கத்தினர் வந்ததால் ஓடிவிட்டது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
