என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
- வீடு, தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கொங்கு நகரில் உள்ள வீடு, தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்ட பங்களாவிலும் 2 குழுக்களாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் சாமிநாதன் என்பதால் அதிகாரிகள் சோதனை என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






