என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்- பிரதமரை சந்திக்க திட்டம்
- நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள டெல்லி பயணம்.
- சாணக்கியபுரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 26ம் தேதி டெல்லி பயணம் செய்ய உள்ளார்.
வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக டெல்லி செல்கிறார்.
முன்னதாக, 26ம் தேதி சாணக்கியபுரியில் தமிழ்நாடு இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
ஏற்கனவே இருக்கும் வைகை என்ற தமிழ்நாடு இல்லம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






