என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெற்றி துரைசாமி மறைவு- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
- வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
- அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில், கடந்த 4ம் தேதி தன் நண்பர் மற்றும் ஓட்டுநருடன் சுற்றுப்பயணம் சென்ற சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் கார் சட்லஜ் நதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.
இதில், வெற்றி துரைசாமி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மாயமானார். இவரை தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இன்று மீட்கப்பட்டது.
வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு சென்னை கொண்டுவரப்பட உள்ளது.
சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Next Story






