என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை ஏற்றி கொடிப்பாடலை அறிமுகப்படுத்தினார் விஜய்- லைவ் அப்டேட்ஸ்

    • தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது.
    • பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

    சென்னை:

    நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, சின்னம் குறித்து முக்கிய அறிவிப்புகளை விஜய் வெளியிட இருக்கிறார்.

    மாநாட்டுக்கு முன்பாக தொண்டர்கள் மத்தியில் தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். இதற்காக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 45 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டுள்ளது.

    கடந்த திங்கட்கிழமை அன்று இந்த கொடிக்கம்பத்தில் மஞ்சள் நிறத்துடன் தனது உருவம் பொறிக்கப்பட்ட கொடியை விஜய் ஏற்றி ஒத்திகை பார்த்தார்.

    இந்த நிலையில், கட்சியின் கொடி அதிகாரபூர்வமாக இன்று பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைக்கப்படுகிறது. நிர்வாகிகள் மத்தியில் கட்சிக்கொடியை விஜய் அறிமுகம் செய்து, கொடியை ஏற்றி வைக்கிறார்.

    இந்த விழாவில் கட்சியை பிரபலப்படுத்தும் வகையில் பிரசார பாடல் அடங்கிய குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

    பாதுகாப்பு காரணம் கருதி குறைந்த அளவு நிர்வாகிகளே கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்கு வர இருக்கிறார். காலை 9.15 மணிக்கு கொடியை ஏற்றி வைக்கிறார்.

    Live Updates

    • 22 Aug 2024 8:40 AM IST

      விஜயின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் காலில் விழுந்து புஸ்ஸி ஆனந்த் ஆசீர்வாதம் பெற்றார்.

    • 22 Aug 2024 8:37 AM IST

      நடிகர் விஜயின் தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் வருகை.

    • 22 Aug 2024 8:23 AM IST

      தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் உறுதிமொழி வெளியானது.

    Next Story
    ×