என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு

கைதான ராமச்சந்திரன்.
ஓட்டலில் ஓசியில் சாப்பாடு கேட்ட தொழிலாளி அடித்துக் கொலை- ஊழியர் கைது

- ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
- தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமலை (வயது50). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதி காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் ஓட்டலில் அடிக்கடி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு தரும்படி அடிக்கடி ஓட்டல் நடத்திவரும் பச்சையம்மாளிடம் கேட்டார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மாலையும் ஓட்டலுக்கு வந்த திருமலை தனக்கு ஓசியில் சாப்பாடு கேட்டு ரகளையில் ஈடுபட்டார்.
இதனை ஓட்டலில் ஊழியராக வேலைபார்த்து வந்த காஞ்சிபுரம் ரெயில்வே சாலை, சன்னதி தெருவை சேர்ந்த ராமு என்கிற ராமச்சந்திரன்(40) என்பவர் கண்டித்தார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அருகில் கிடந்த சவுக்கு கட்டையால் திருமலையை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே கொலையாளி ராமச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் பதுங்கி இருந்த ராமச்சந்திரனை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.